Saturday, December 8, 2012

FDI

FDI

மன்னருக்கு மகுடி ஊதி
மந்திரிய மசிய வச்சு
வால சுருட்டிகிட்டு, வெள்ளந்தியா நடிச்சிக்கிட்டு
வெள்ளைக்கார வல்லுரும், வீதிக்கு வந்தாச்சு...


வீனா பேசிபுட்டு, நீயா நானா பாத்து தூங்கி
திங்க கெளமா வேலைக்கும், திட்டிகிட்டே சனம் போயாச்சு.
தீர்மானம் நேரவேற எதிர் கட்சி பச்சோந்திங்க
பேசாம  இருக்க பேரமும் முடிஞ்சாச்சு!

உள்ளூரு அண்ணாச்சியும்,
கமிசன் மண்டி கந்தசாமியும்
உல கொதிக்க வழி இல்லாம
உசுர விடும் நேரம் பாத்து

கெக்கலிச்சு சிறுச்சு நிக்க
கேதம் வந்து கேட்டு போக
தயாரா நிக்கிறான் தடி பய FDI!!!

No comments:

Post a Comment