Wednesday, August 22, 2012

தமிழின் திசை

தமிழின் திசை 


நம் குழந்தைகளுக்கு நாம சொல்லி கொடுக்கும் தமிழ் எடுத்துள்ள பரிணாமம் கொஞ்சம் விமர்சிக்க பட/ ஆராய படவேண்டும்  என நினைக்கிறேன்..

"அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல் "

என்று நம் ஔவை பாட்டி சொல்லி கொடுத்த தமிழை

பாரதி சற்றே மாற்றி

"அச்சம் தவிர் 

ஆண்மை தவறேல் 

இளைத்தல் இகழ்ச்சி 

ஈகை திறன் "


என்று மாற்றினார்

அனால் இப்போது நம் குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுப்பது அறமும் இல்லை, ஆண்மையும் இல்லை.


"அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு.."


நாம் போய்கொண்டிருக்கும் திசை சரிதானா?

நாம் ஏன் மீண்டும் ஔவையையும் பாரதியையும் நம் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க கூடாது ?


சிந்திப்போம்...
ஓம் 

No comments:

Post a Comment