Friday, June 22, 2012

மதன் கார்கி

மதன் கார்கி

இவர் எந்திரன் படத்தில் 2 பாடல்கள் எழுதினர். நன்றாக இருந்தது. ஒரு மாற்றம் இருந்தது அவர் வார்த்தைகளில். 

ஆனால் அதை தாண்டி நான் அவர் வரிகளை ரசித்ததில்லை. நேற்று விஜய் TV இன் நிகழ்ச்சி ஒன்றில் நா.முத்துக்குமார் அவர்கள், இவரை புகழும் பொது தான், அப்படி என்னதான் பா எழுதி இருக்காருன்னு பாத்தேன்.

இவரின் வரிகள் அத்தனையும் மிகவும் கவர்வதாக இருந்தது. 
நான் ரசித்தவற்றில் சில 

நிழலைத் திருடும் மழலை நானோ?
(இந்த வரி தான் நா முத்துக்குமார் அவர்கள் கூறி எனை ஈர்த்த்தது)

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே

ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்

நீ கோரினால் வானம்  மாறாதா
தினம் தீராமலே மேகம் தூராதா

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!

கண்டும் தீண்டிடா
நான் போதை ஜாதியா

எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..

மாற்றம் தேடியே - தினமொரு
நேற்றைத் தோற்கிறோம்
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..

அண்டி அகலுது வழியில்.. 
சிந்திச் சிதறுது விழியில்!! 

சுத்தி சுத்தி உன்னைத் தேடி.. 
விழிகள் அலையும் அவசரம் ஏனோ? 
சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?


நன்றி,
ஓம் 


No comments:

Post a Comment