Thursday, February 23, 2012

MGR நாகராஜன்

விகடனில் MGR நாகராஜன் என்பவரை பற்றி படித்தேன். MGR இன் தீவிர பக்தராக இருக்கிறார். பக்தர் என்றால் சும்மா இல்ல, கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு உண்மையான பக்தர். அவரது தீவிரமான, வெள்ளந்தியான பல செயல்களை குறிப்பிட்டு இருந்தார்கள். அவருக்கு அவர் தலைவர் மீது எவ்வளவு பக்தியும் சிரத்தையும் இருந்திருந்தால் இப்படி எல்லாம் செய்திருப்பார். 

இன்று அப்படி பட்ட தலைவர்களுக்கு கோயில் கட்டுவது போய், நடிகைகளுக்கு கோயில் கட்டும் நிலைமை நம்மிடத்தில் நிலவுவதுதான் நிஜத்தின் நிதர்சனம். எந்த ஒரு இளைஞனும் அரசியலை கவணிக்காமல் இல்லை. அனால் அதை எட்ட நின்று பார்க்கும் பார்வையாளனாகவே இருக்க, இருந்துவிட நினைக்கிறான். அரசியல் என்பது சேவை என்பது மாறி, வியாபாரம் ஆகவே உருவெடுத்து நிற்கிறது. ஒரு கட்சி தலைவனின் பேச்சு, ஐந்து நிமிடத்துக்கு மேல் சலிப்படைகிறது. காரணம் அதே வாக்குறுதிகள், அதே பொய்யும் புரட்டும். அவன் பேசுவது அப்பட்டமான பொய் என்பது தெரிந்து தான் அந்த ஐந்து நிமிடம் அங்கே நின்றோம். அதற்க்கு மேல் அதை கேட்க்க புத்தி இடம் அளிப்பதில்லை.

MGR நாகராஜனை போல் இன்று தொண்டர்கள் அமையாததிர்க்கு காரணம், தொண்டர்களா அதற்குரிய தகுதிகள் இல்லாத தலைவர்களா. இன்று தமிழகத்தில், குறை இல்லாத, குற்றம் சுமத்தபடாத ஒரு உத்தமமான அரசியல் வாதியையை காட்டுங்கள் பார்க்கலாம். ஒரு பூத கண்ணாடி தேவைபடுகிறது. இன்னும் நாம், கக்கனையும், காமராஜரையும் தான் உதாரணம் காட்டிகொண்டிருகிறோம். காமராஜரை தோற்கடித்த திராவிட கட்சிகள், நம்மை மாறி மாறி ஆண்டு வருகின்றனவே, அவைகளில் ஒரு தலைவன் கூட காமராஜருக்கு நிகராக நம்மால் உதாரணம் காட்ட முடியவில்லை. 

No comments:

Post a Comment