Sunday, February 5, 2012

சட்டசபை

இன்று தான் சட்டசபை நடவடிக்கையை தொலைகாட்சியில் கண்டேன். விஜயகாந்தை வெளியேற்றிய பிறகு நடந்த கூட்டம். நிச்சயமாக ஒவ்வொரு குடிமகனும் இதை பார்க்க வேண்டும். அதில் எதிர் கட்சியாக நின்று பேச பிராதான எதிர்க்கட்சி இல்லாததால் தீ மு க உறுப்பினர் ஒருவர் பேசுகிறார். அவர் முன் வைக்கும் முக்கியமான பிரச்னை கலைஞர் கூடம் என்று இருந்ததை இன்று கலை கூடமாக பெயர் மாற்றியது ஏன் என்பதுதான்.நாட்டிற்கு இதை விட வேறு பிரச்சனைகள் இல்லையா?

இதில் பேசியவர்கள் அனைவரும், அம்மாவின் துதிபாடுவதிலேயே குறியாய் இருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் மீதோ, மக்களின் பிரச்சனிகள் மீதோ அக்கறை இல்லை. கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் மூன்றாவது நாள் அது. மூன்றாவது நாளாகியும் கூட ஒரு உருப்படியான பேச்சோ, செயலோ இல்லை. 

மேலும், சபாநாயகர் நடந்து கொள்ளும் விதம், இதை சர்வாதிகார ஆட்சியாகவே இருக்க செயல் பட்டது. ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். இதை ஆதரிப்பவர்கள் ஆம்  என்க, எதிர்பவர்கள் இல்லை என்க என்கிறார். அதில், இரெண்டாம் பகுதியை வேகமாக சொல்கிறார், அங்கே சலசலப்பு வருகிறது. அனால் அதை யாரும் செவி கொடுத்து கேட்கவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பேச்சுக்கே மரியாதை இல்லாத இந்த நாட்டில், ஒரு சாதாரண குடிமகனின் பேச்சு எப்படி எடுபடும். நாங்கள் எதை தான், யாரை தான் நம்புவது. 

No comments:

Post a Comment