Friday, October 7, 2011

கூடங்குளம் அணுமின்...


கூடங்குளம் அணுமின்... 


அப்படின்னா என்ன?
கூடங்குளம் அணு உலை
கட்டுமான பணிகள்
இது ஒரு அணு உலை நிருமனத் திட்டம். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரஷ்யாவில் நடந்த பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார காரங்களுக்காக இது தள்ளி போடப்பட்டது என்று காங்கிரஸ் அரசு கூறி வருகிறது.


1968 இல் விபத்திற்கு உண்டான
உக்ரைன் அணு உலை
அனால் 1986 இல் உக்ரைனில் நடந்த அணுஉலை பேரழிவிற்கு பிறகு அந்த மாதிரியான அணுஉலைகளை மூட ரஷ்யா ஆணை இட்டது. அப்போது வடிவமைக்கப்பட்ட இந்த உலைகளையும், அதன் தொழில்நுட்பத்தையும் இந்தியாவிடம் தள்ளி விடுவதற்காக ரஷ்யா செய்த சதி இது, அது மட்டும் அல்ல, பல கோடி ருபாய் கடனில் இருந்த ரஷ்யா இதை இந்தியாவிற்கு விற்று தன் கடனை நேர் செய்துகொண்டது என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.2001 ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் பணிகள் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில் இருந்தன.


சரி.. இப்போ என்ன பிரச்னை..

தங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அச்சம்:
இது ஒரு சமுக மற்றும் சுற்றுபுறச்சுழல் பிரியனின் ஞாயமான ஒரு பயம். இந்த அணு மின் நிலையத்தில் இருந்து வரும் கழிவுகள் பேராபத்தை விளைவிக்கும். அந்த பகுதிகளில் புல் பூண்டு முளைக்க முடியாத அளவிற்கு இதன் தாக்கம் இருக்கும். இது கடலோர பகுதி என்பதாலும், இந்த உலையின் கழிவுகளை வங்காள விரிகுடாவில் கலக்கும் திட்டம் இருப்பதாலும் அங்குள்ள மீன் மற்றும் கடல் வாழ உயிரினங்கள் பாதிப்பு அடையும் . இன்னும் ஒருபடி அதிகரித்து சொன்னால் அவை மடிந்து விடும்.
இந்த கடலை நம்பி வாழும் பல்லாயிர கணக்கான மீனவ குடும்பத்திற்கு இது வாழ்வியல் சவாலாக முடியும்.

அனால் இதெல்லாம் அன்றே நமக்கு தெரிந்தவை தான். 1986 இல் உக்ரைனில் நடந்த அணு உலை பேரழிவு நாம் எல்லாம் அறிந்ததே. அனால் அதெல்லாம் தெரிந்திருந்தும் இதை நிவர்த்தி செய்ய தேவையான முன் எச்சரிக்கைகள் எடுக்க படும் என்ற உறுதியோடு, பல்வேறு ஆராய்ச்சிக்கு பின்னர் எந்த விளைவும் ஏற்படாது என்ற ஆய்வறிக்கைக்கு பிறகு தான் அன்றைய அரசு இந்த திட்டத்தில் கையொப்பம் இட்டது. ஆனால் பல்வேறு சர்வதேச அணுபாதுகாப்பு அமைப்புகள் இதை அங்கீகரிக்கவில்லை. ஆகவே பத்தாண்டுக் காலம் கிடப்பில் கிடந்த இந்தத் திட்டம் 2001ல் மீண்டும் சூடு பிடித்தது.

ஆதாயம்:
இது சர்வ சாதரணமாக இந்திய குடிமகனுக்கு அரசு ஒதுக்கும் ஒவ்வொரு காசுக்கும் பங்கு கேட்டு கிஸ்தி எதிர்பார்க்கும் அரசியல் ஜாக்சன் துறைகளின் ஆட்டம்.

இந்த திட்டத்தில் லாபம் அடைந்தது யார் என்று பார்த்தால் முதலில் நிச்சயமாக ரஷ்யா! அதற்கு அடுத்தபடியாக அன்றைக்கு இதை கையொப்பம் இட்ட ராஜீவ் காந்தியில் இருந்து இன்று அதை செயல்படுத்த துடிக்கும் இத்தாலி காந்தி வரை அனைவரும் இதில் பயன் அடைந்தவர்கள்.
அது போக, இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக சொல்லி அரசியல் ஆதாயம் தேடும், அம்மா கட்சி முதல் அடிமட்ட அய்யா கட்சி வரை...

இவர்களுக்கு கிஸ்தி; பணம், ஓட்டு என ஏதோ ஒரு ஆதாயமாக மாற வேண்டும். மக்கள் மேல் அக்கறை இந்த கரை படிந்த கரை வெட்டிகளுக்கு ஒரு பொருட்டில்லை. அவர்கள் குறிக்கோள் "ஆதாயம்"


இத்தன வருசதுக்கபுரம் இப்போ என்ன பிரச்னை...?

இந்த அணுஉலைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி 1988 முதலே நிகழ்ந்து வருகிறது. இப்போது சில தனிப்பட்ட செயல்பாட்டாளர்களின் முயற்சியால் மக்கள் திரட்டப்பட்டு போராட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

சமீபத்தில், ஜப்பானில் நடந்த இயற்கை சீற்றத்தின் போது, அவர்கள் பெரும்பாதுகாப்பில் வைத்திருந்த அணு உலைகளின் கசிவை அவர்களால் சரியாக கட்டுபடுத்த முடியவில்லை. இது நம் மக்களிடையே பீதியை கிளப்பியது. அவர்களின் அச்சம் மேலும் வலுவுற்றது. இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் நம்மால் தாக்கு பிடிக்க முடியாது என்பதை மக்கள் உணர தொடங்குகிறார்கள்.

2004 இல் ஏற்பட்ட சுனாமியின் போது கூட இந்த கட்டிடங்கள் சேதமாயின. அதை மறுபடியும் சரி செய்தார்கள்.
அனால் இதையெல்லாம் மறைத்து, மறுத்து மத்திய அரசு, இங்கு எந்த வித இயற்கை சீற்றமும் வராது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. (எப்படி செஞ்சாங்கன்னு கேக்காதீங்க.. அது அவங்களுக்குதான் தெரியும்....!!!)

அப்போ இது நெஜமாவே பயங்கரமான ஒரு விஷயமா..?

இது விபதிற்குளாகும் பட்சத்தில் இதன் விளைவு விபரீதமாகவே இருக்கும். அனால் இதனால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். மின்சாரம் ஆபத்தானது என்று முடிவு கட்டி இருந்தால் நாம் இன்னும் ஆதிவாசியாய் திரிய வேண்டியதுதான். உயர பறப்பது பறவைக்கு மட்டுமே உண்டான உரிமை என்று உட்கார்திருந்தால் விமானம் ஏது நமக்கு? ஒவ்வொரு கட்டிடம் எழுப்பும் போதும் நாம் பல உயிரினகளின் வாழ்வாதாரத்தை பறித்தே நாம் நம் வாழ்வை தொடங்குகிறோம் இது சரியாய்? சரி என்றால் எதுவும் சரியே!!
இந்த விளைவுகளை எப்படி தடுப்பது, அதை தவிர்க்க என்ன செய்வது போன்ற வழிவகைகளை ஆராய்ந்து, மின்சாரம் இல்லாமல் மாண்டு வீழும் மானுடத்தை மீட்க முயற்சிக்க வேண்டும், அதே சமயத்தில் இதனால் பாதிக்கப்படும் சமூகத்திற்கு மாற்று தேட வேண்டும். அதை தவிர்த்து, அறிவியல் ஆபத்தானது ஆகையால் அதை கைவிட வேண்டுமென வாதிப்பது பொறுத்தமற்றது. கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடங்கும் போதும், இந்த சலனங்கள் எழுந்தன. அதை அன்றைக்கு இருந்த மதிய அரசும் சரி, மாநில அரசும் சரி ஒரு பொருட்டாக எண்ணாமல் மக்களுக்கு அதில் இருக்கும் சாதக பாதகங்களை மட்டுமே ஆராய்ந்து ஒரு திண்ணமான முடிவெடுத்தனர்.

கல்பாக்கம் அணுமின் நிலையம்
நமக்கு இன்றைய தேவை அப்படிப்பட்ட காமராஜரும், இந்திரா காந்தியும் போன்ற தலைவர்கள் தான்! 

இந்த பிரச்சனையில், அவர்கள் கட்சிக்கு உள்ள அரசியல் சாதக பாதகங்களை ஆராயும் கொள்ளையர்கள் அல்ல!
இதை மேலும் அரசியல் ஆக்காமல் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்!

பரிவுடன், 
ஓம்!

2 comments:

  1. Recent comments on this issue from Chief minister of Tamilnadu

    http://news.vikatan.com/index.php?nid=4442

    ReplyDelete
  2. Another interesting article about this issue
    http://www.vikatan.com/article.php?aid=11702&sid=319&mid=1

    ReplyDelete