Monday, September 12, 2011

கை பேசி இணைய தளங்கள்

இது கணினி காலம் என்பதை நாம் மறுக்க இயலவில்லை.

Facebook இல் சொந்தங்களை தேடியும், twitter மூலமாக நண்பனின் திருமணத்தை அறிந்தும், SKYPE இல் பெற்றோரிடம் உரையாடியும் பழகி விட்டோம்.
இறந்துபோன என் பாட்டியின் கடிதங்கள் ஈமெயில் இல் முழ்கி போன என்னை இன்லாந்து லெட்டருக்கு மீண்டும் அறிமுகபபடுத்துகிறது. காலத்தின் கட்டாயமான இது "மாற்றம்". மாறுவது ஒன்றும் தவறில்லை. 

அன்று என் பாட்டன் பாரதி இட்ட கட்டளை நிறைவேறிக்கொண்டு இருக்கிறது
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 
அவன் இட்ட கட்டளையில் எனது பங்கிற்கு இதோ..

கணினி வங்கி, நிதி துறை போன்ற அலுவலகங்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, மாணவர்கள் கையில் மடி கணினியாய் தவழ்ந்ததும் மாறி, இப்பொழுது தொலை பேசியில் தகவல் அறியும் தொழில்நுட்பம் வந்து விட்டது. iphone, blackberry, android போன்ற தொலை பேசி சாதனங்களில் GPRS இன் உதவியுடன் நாம் இணையதளங்களை இறக்கம் செய்கிறோம், படங்கள், காணொளிகள் காண்கிறோம்.  இவற்றின் முகவரியை (URL) நீங்கள் உற்று பார்த்ததுண்டா?

பெரும்பாலும் அவை m. என தொடங்கும். உதாரணமாக நீங்கள் உங்கள் கை பேசியில் google.com என்று அடித்தாலும் அது m.google.com ஆக மாறிவிடும்.
இதன் பின்னணி என்ன? நீங்கள் எந்த வகையான சாதனத்தில் இருந்து அந்த இணையதளத்தை பார்க்றீர்கள் எனபது அந்த இனைய தளத்தின் webserver மூலம் அவர்கள் அறிந்து கொள்வார்கள். அப்புறம் அவர்களுக்கு தேவையான படி உங்களை திசை திருப்பிவிடுவார்கள்.

இதன் மூலம் நாம் உபயோகபடுத்தும் சாதனத்திற்கு ஏற்றவாறு அவர்களால் அவர்களது இணையதளத்தை வடிவமைத்து தரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சாதனத்திற்கு ஏற்ற மாதிரி பக்கங்கள் மட்டும் அல்ல. ஆளுக்கேற்றமாதிரி பக்கங்களும் அவர்களால் வடிவமைக்க கூடும். உதாரனத்திற்க்கு நீங்கள் www.google.com என்பதை இந்தியாவில் இருந்து அடித்தீர்கள் அனால் அது google.co.in ஆக உருமாரி கொள்ளும். அதில் இருக்கும் வடிவமைப்பும் வேறு மாதிரி இருக்கும்.
அடுத்த இதழில் android பற்றி விரிவாக காண்போம்!

-ஒம்

No comments:

Post a Comment