Sunday, June 19, 2011

அவன் - இவன் :(

அவன் - இவன்
நான் பாலாவின் தீவிரமான ரசிகன். 
சேது படத்தில் இருந்து "நான் கடவுள்" வரை அவர் படங்களின் திரைக்கதை எதார்த்தத்தை காதலித்த ரசிகன். அப்படி இருந்ததினாலோ என்னவோ எனக்கு அவன்-இவன் பெரும் ஏமாற்றமாய் இருந்தது. அவர் கதைகள் எப்போதும் எதார்த்தத்தில் சற்று மீரியவைகளை இருக்கும் அனால் அவர் திரைக்கதை நம்மை ஒரு எதார்த்தத்திற்கு இழுத்துச செல்லும். இந்த படத்தில் அந்த எதார்த்தம் படம் ஆரம்பத்திலேயே உடைக்கப்பட்டது. 

அவன் விஷாலுக்கும் இவன் ஆர்யாவிர்க்கும் நடக்கும் கதை என்றாலும் இதில் கதா நாயகனாக நான் பார்ப்பது Highness ஆகா வளம் வரும் GM Kumar தான். 
விஷால், ஆர்யாவை சுற்றி தான் கதை நகர்ந்தாலும், கதையை நகற்றுவது GM குமார் தான்.
விஷாலும் ஆர்யாவும் திருட்டு சகோதரர்கள். அவர்களுக்கு ஜமீந்தார் GM குமார் சேர்ந்து தண்ணி அடிக்கும் அளவிற்கு மிகவும் நெருக்கமான சிநேகிதர். ஒரு கட்டத்தில் அதாவது படத்தின் கட்டக்கடைசியில் ஒரு வில்லன் வருகிறான். அவனுக்கு எதிரான அநியாயத்தை தட்டி கேட்கிறார் GM குமார் அவனை சிறையிலும் அடைகிறார். இதுக்கு அப்புறம் என்ன நடக்குமென சின்ன பிள்ளைக்கு கூட தெரியும். இருந்தாலும் நீங்க படம் பாத்து தெரிஞ்சுகோங்க. 

இதுல என்ன நெருடல்னா, அவளோ பெரிய ஜமீந்தார் எப்படி அனாதையானர்னு தெரியல. அவர யாரோ எமாத்தீட்டாங்கனு சொல்றாங்க, யார் ஏமாத்துனா என்ன எமத்துநானு ஒன்னும் புரியல. இவ்வளவு பெரிய ஜமீந்தார் எதுக்கு இப்படி திருட்டு பசங்களோட சகவாசம் வச்சிருகிராருனும் தெரியல. அதுக்கு எந்த காரணமும் சொல்லப்படல. விஷால் ஒரு போலீஸ் கார பிள்ளைய லவ் பண்றாரு. ஒரு திருடன் மேல எப்படி ஒரு போலீஸ்காரிக்கு லவ் வரும்னு தெரியல. அதுக்கு எந்த ஒரு காரணமும் தெளிவாக படத்துல இல்ல. அதே மாதிரி தான் ஆர்யாவின் காதலும். வெறுப்பும் கோபமும் மட்டுமே வரக்கூடிய ஒரு கேரக்டர் மேல காதல் வரதுக்கு திரைகதைல தெளிவான ஒரு காரணம் இல்ல. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், போலீஸ் திருடனை பார்த்து பம்முவது, இதெல்லாம் சிரிப்புக்காக அவர் செய்தார். லாஜிக் பாக்காம சிரிங்க என்று சொன்னால் கூட, நம்மால் முடியவில்லை. படத்தில் எதிர் பார்த்து போன பாடல்களும் இல்ல.. அதுவும் பெரும் ஏமாற்றம்!

இப்படி நிறைய ஏமாற்றங்கள் இருந்தாலும், ஆறுதல் தருவது 
S.ராமகிருஷ்ணனின் வசனங்கள். ஒரு சில இடங்களில் ஜனரஞ்சகமான தேனீ மாவட்டத்தின் குசும்ப அள்ளி தெளிக்கிறார்.

படத்தின் பலம் அணைத்து நடிகர்கள்! மிக அற்புதம், நாங்க அவார்டுக்காக நடிக்கலன்னு விஷால் பேட்டியில் சொன்னாலும், அவர் அவார்டுக்காக தான் நடித்தார்னு தெளிவா தெரியுது. ஆனா உண்மைலேயே சூப்பர்.
இந்த வணங்காமுடிக்கு எதுக்கு ஒன்றகன்னுனு யோசிச்சு பாத்தேன், எனக்கு அப்படி ஒன்னும் பெருசா காரணம் தெரியல. ஒரே ஒரு காரணம் தான் தேசிய விருது. ;)
அவர் ஒரு பக்கம் அசத்த, GM குமார் அசத்திட்டாரு. விஷாலை பார்த்து வயுற குலுங்க சிரிக்கும் போதும் சரி, ஆரியாவை வீட்டை விட்டு வெளிய போக சொல்லி அழும் போதும் சரி. "வீட்டுக்குள்ள வருவேன் ஆனா சாப்பிட மாட்டேன்னு.." அடம் பிடிக்கும் போதும் சரி, கிளைமாக்ஸ்லயும் சரி பிச்சு ஓதரீட்டாறு. பட்டய கெளப்பிட்டாரு!!!

மொத்ததுல இந்த படம் நடிகர்களுக்கு ஒரு விருந்து, பாத்த நமக்கு :(

No comments:

Post a Comment