Saturday, June 11, 2011

பொன்னியின் செல்வன்

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படித்து முடித்தேன். கொஞ்சம் பெரிய கதை தான். இருந்தாலும் ஒரு இடத்தில கூட கதை சலிப்படையவில்லை! அபாரம்!!! எந்த தலைமுறைக்கும் பிடித்து ரசிக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார் ஐயா கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்! நீண்ட புத்தகம் என்பதால் இதை முடிக்க சில நாட்கள் பிடித்தது.

நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒருவரை கூட நன் மறக்க வில்லை. இவர்களை ஞாபகம் வைத்து கொள்ள சலிப்பு தட்டவும் இல்லை. வெகு அற்புதமாக இருந்தது! கதை சோழர்களின் காலத்தில் பயணிக்கிறது. இதை படிக்கும் பொது மனதிற்குள் உண்மையாகவே ஒரு period படம் தெரிகிறது. தோட்டாதரணி செட் போட்டு மனத்திரையில் படம் அபாரமாக ஓடுகிறது!

பொன்னியின் செல்வன் என்ற தலைப்பு இருந்தாலும் கதையின் நாயகன் சாகச வீரன் வந்தியத்தேவன் தான்.  ஆதித்த கரிகாலனின் நண்பனாக தூதுவனாக தஞ்சை செல்லும் வழியில் கதை தொடங்குகிறது. வந்தியதேவனை சுற்றியே கதையும் நகர்கிறது. இதை வெறும் கதை என்று மட்டும் செய்யாமல் அந்த காலகட்டத்தின் ஒரு வரலாறு பதிவாகவே இதனை படைக்கின்றார் கல்கி. அங்கு நடக்கும் வெவ்வேறு கலாசார நிகழ்வுகளையும் பதிவு செய்கின்றார். 

 பராந்தக சக்கரவர்த்திக்கு இரண்டு புதல்வர்கள் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்று அழைக்கும் அருள்மொழி வர்மன். இருவரும் வெவ்வேறு சைனியங்களை ஆண்டு போர் நடித்தி கொண்டிருக்கும் வீரர்கள். பராந்தக சோழருக்கு பிறகு அரியணை யாருக்கு என்பதே கதையின் சுருக்கம். இவர்கள் இருவர்தான் பொட்டிய என்றால், கிடையாது. பராந்தக மன்னருக்கு தம்பி முறை வரும் மதுராந்தக தேவரை அரியணை ஏற்றுவதற்கு ஒரு சதி நடக்கிறது. அந்த சதியில் பாண்டிய நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சதிகளில் இருந்து சோழ நாட்டை காப்பாற்றும் பொறுப்பில் பெரும் பங்கு வந்தியதேவனை வந்து சேர்கிறது. இந்த கதையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வலம் வருகிறார்கள். பாண்டிய மன்னனின் தலையை கொண்டதற்காக பழிவாங்கும் எண்ணம் கொண்ட நந்தினி ஆதித்த கரிகாலனை கொள்ள திட்டம் தீட்டுகிறாள். 
பொன்னியின் செல்வரின் சகோதிரியும் வல்லத்து  நாட்டு வந்தியதேவனின் மனதை கொள்ளை கொள்ளும் குந்தவை நாச்சியாரின் தெளிவு, நேர்த்தி, புத்திகூர்மை நம்மை வியக்க செய்கிறது. படகு பெண் பூங்குழலியின் தைரியம், வீரம் மட்ட்ருமொரு வியப்பு. 

கதையில் சொல்லபடாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலனின் மரணம். வெவ்வேறு ஆட்கள் அவரை கொன்றதாக கோருகிறார்கள். அனால் இறுதிவரை அந்த மந்திர முடிச்சை அவிழ்க்காமல் வாசகரின் பார்வைக்கு விட்டுவிட்டார் கல்கி. 

 பெரிய பழுவேட்டையர் ஒரு கம்பீரத்துடன் தெரிகிறார். கதை படி அறுவது வயதான அவர் சபலத்தால் நந்தினியின் மோக வலைக்குள் விழுகிறார். இருந்தாலும் அவர் மேல் எனக்கு மரியாதை குறையவில்லை. மற்றும் பலர் இருகிறார்கள். அதில் முக்கிய மந்திரி அநிருத்த பிரம்மையரின் சீடன் ஆழ்வார்கடியான் நம் கவனத்தை இழுக்கிறார். வந்திய தேவன் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் ஆபத்வானனாக வந்து அவனை காப்பாற்றுவது இவன் தான். 
 
ஒரு சரித்திர கதையை சாதரணமாக சொல்கிற பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று பெட்டகம் என்று தான் சொல்ல வேண்டும்!

No comments:

Post a Comment