Sunday, March 6, 2011

மாய கண்ணாடி!!

எங்க ஊர் பக்கம் வெத்தலைல மை தடவி பாத்து ஜோசியம், பலன்கள் சொல்வார்கள்.  இந்த மாயகண்ணாடியும் ஏறக்குறைய அது மாதிரி தான்!
முந்தைய இதழ் ஒன்றில் சமூக இணையதளங்கள் நம் தகவல்களை எப்படி காசாக்குகிறார்கள் என்று சொன்னேனே ஞாபகம் இருகிறதா. இந்த மாய கண்ணாடி அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு யுக்தி.

சாதாரணமாக நாம் ஒரு ஜவுளி கடைக்குள் செல்கிறோம் பிடித்த உடைகளை உடை மாற்றும் அறையில் அதை போட்டு பார்க்கிறோம். பிடித்திருந்தால் அதை வாங்குகிறோம், இல்லை என்றால் வேறு உடை தேடுகிறோம். இதற்கு பதிலாக அந்த கண்ணாடியே நமக்கு இந்த ஆடை எப்படி உள்ளது என்று கருத்து கூறி இந்த ஆடைக்கு பொருத்தமான வேறு ஆடைகளையும் பரிந்துரைத்தால் எப்படி இருக்கும்..! 

அதெப்படி ஒரு கண்ணாடிக்கு இந்த சக்தி கிடைக்கும், கதைகளில் மட்டுமே இது சாத்தியம், நிஜத்தில் நடக்காது என்று நினைத்தால், அதை மறுபரிசீலனை செய்யுங்கள்!! 


இன்று Gesture- and facial-recognition technologies என்று சொல்லும் முக பாவங்களை உணர்ந்தறியும் பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. உதாரணத்திற்கு Microsoft நிறுவனம் Kinect என்ற ஒரு விளையாட்டு சாதனத்தை அறிமுகபடுத்தி அது சந்தையில் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது. இந்த சாதனத்திற்கு வழக்கமாக வீடியோ கேம் களில் இருக்கும் ரிமோட் இல்லை. இது முழுக்க முழுக்க சென்சர்கள் மூலமாக இயங்குகிறது! ஆச்சிர்யம் ஆரம்பம்! 

இப்படி ஏற்கனவே சாத்தியமாய் இருக்கின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம் மாயகன்னடியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்!

ஒருவர் அந்த கடைக்குள் நுழையும் போதே ஒரு கேமரா அவரை படமெடுத்து கொண்டு, அவரை மற்ற ஊடகங்களுக்குள் தேடுகிறது. இவர் facebook, twitter, google, myspace ...  என எதாவது ஒரு ஊடகத்துள் இருந்தால் இவரை இன்னாரென அடையாளப்படுத்திகொள்ள முடியும். அப்படி இல்லாவிட்டாலும் அவர் ஆணா பெண்ணா, என்ன வயது வரம்பிற்குள் இருப்பால் என்பதையாவது யுகம் செய்ய முடியும். அடுத்து என்ன? அவரது ரசனை ஓரளவிற்கு தெரிய வரும், அப்படியே தெரியா விட்டாலும், அவர் அந்த கடைக்குள் செல்லும் பகுதிகளை வைத்து, அல்லது நம் மாயக்கண்ணாடி முன் அவர் அணியும் ஆடைகளை வைத்து அவர் எதை விரும்பிகிறார் என யூகிக்க முடியும். பின் நாம் அதற்க்கு சம்பந்தமான மற்ற பொருட்களை மாயகன்னாடியிலையே விளம்பரம் செய்யலாம், அங்கயே அதை அவர் வாங்கும் வழிகளும் செய்யலாம்! இதில் மேலும் பல்வேறு வியாபார யுத்திகளை கையாள வாய்ப்புகள் உள்ளன!!!

நமக்கே தெரியாமல் நம்மை பற்றி தெரிந்துகொண்டு நமக்கு தேவையானவற்றை கூறும் இது ஒரு மாயகண்ணாடிதானே?!!

No comments:

Post a Comment