Monday, February 14, 2011

facebook -- ஒரு சகாப்தம்...

இந்த இதழில் facebook இன் வரலாறை சற்று விளக்கமாக பார்போம்! எப்படி இந்த நிறுவனம் உருவானது... சுமாராக ஐந்து கோடி வாடிக்கையாளர்களை கொண்ட இந்த 410 கோடி மதிப்புடைய நிறுவனத்தின் மூலம் என்ன என்பதை அலசுவோம்...


எப்படி இது உருவானது?
மார்க் ஜுச்கேர்பெர்க் (Mark Zuckerberg
மார்க் ஜுச்கேர்பெர்க் (Mark Zuckerberg) ஹார்வர்ட்(Harvard) பல்கலைகழகத்தின் மாணவர். அவரது கல்லூரியில் அப்போது ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் அந்த வருட மாணவர்களின் தகவல்களை கொண்ட புத்தகம் ஒன்று அணைத்து மாணவர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுபப்படும், அதன் மூலம் அந்த ஆண்டு தன்னுடன் படிக்கும் மற்ற மாணவ மாணவியர்களின் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இந்த சுற்றறிக்கை புத்தகத்தின் பெயர் "facebook". அதை சுற்றறிக்கையாக அனுப்புவதற்கு பதிலாக அதற்கு ஒரு இணையதளத்தை உருவாக்கினால் என்ன என்று மார்க் நினைத்தார்... அது தான் "facebook" இன் கரு! 


February 2004 இல் ஹார்வர்ட் மாணவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமான இந்த இணையத்தளம் வெளியானது. வெளியான இரண்டே வாரங்களில் இது சக்கை போடு போட்டு இருக்கிறது! பின் போஸ்டன் (Boston) நகரின் முக்கால்வாசி பள்ளி, கல்லூரிகளில் இதை கேட்க தொடங்கின! இதன் பெரும் வரவேற்ப்பை கண்ட மார்க் தனது நண்பர்களான டஸ்டின் மச்கொவித்ஸ் (Dustin Moskowitz) மற்றும் கிரிஸ் ஹுகேஸ் (Chris Hughes)  ஐ கூட்டு சேர்த்து வேலையில் மும்முரமாக இறங்கினார். நான்கே மாதங்களில் முப்பதிற்கும் மேற்பட்ட கல்லூரிகள் இவர்கள் "facebook" இல் இணைந்தன. 


முதல் முதலீடு
Peter Andreas Thiel
His wealth in Facebook share alone,
at a 2010 valuation, is worth US$1.7 billion
இந்த மூன்று நண்பர்களும் இதை பெரிய அளவில் செய்யலாம் என முடிவெடுத்து கலிபோர்னியாவில் உள்ள பால் அல்டோ (Pal Alto) என்ற நகருக்கு குடி பெயர்ந்தனர்! (இங்க தான் "facebook" இன் தலைமை செயலகம் இருக்கிறது). இங்கேதான் மார்க்கிற்கு ஷேன் பார்கரின் (Sean Parker) சிநேகிதம் கிடைத்தது.. இவர் நாப்ச்டேரின் (Napster) இன் மூல கர்த்தா. 2008 இல் பெஸ்ட் பை (Best Buy) நிறுவனம் 121 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நாப்ச்டேரை வாங்கியது குறுப்பிடதக்கது.


இவர் மூலமாக "பேபால்" (Paypal) நிறுவனத்தின் நிறுவனர் பீட்டர் தில் (Peter thiel) இன் அறிமுகம் கிடைத்திருக்கிறது. 
இவர் The Founders Fund எனும் ஒரு மிக பெரிய வேஞ்சுரே காபிடல் (Venture Capital) நிறுவனத்தின் முதலாளி 
இவர் தான் முதன் முதலில் "facebook" இல் முதலீடு செய்ய முன் வந்தார்! எவ்வளவு தெரியுமா? 
ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள்!


கிடுகிடுவென வேகமாக வளர்ந்தது "facebook" இனையதளம்! வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கண்ணாபின்னாவென்று எகிறியது. இதை கண்ட பல நிறுவனங்கள் இதை வாங்க முன்வந்தனர். "friendster" எனும் நிறுவனம் இதை 2004லேயே ஒரு கோடி கொடுத்து இதை வாங்க முன் வந்தது! ஆனால் facebook விலை போக மறுத்தது.
மேலும் பல முதலீட்டாளர்கள் இதில் பணம் போட முன் வந்தனர். குறிப்பாக Accel Partners 12.7 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது. Greylock Partners மற்றும் Meritech Capital  நிறுவனங்கள் 25 மில்லியன் முதலீடு செய்தார்கள்.  2006 இல் இ-மெயில் வைத்திருக்கும் அனைவருக்கும் facebook பொதுவானது! 


2006 இல் யாஹூ நிறுவனம் ஒரு பில்லியன் கொடுத்து இதை வாங்க முன்வந்தது. ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 


Pal Alto வில் இருக்கும்
facebook அலுவலகத்தின் முகப்பு 
இதற்கிடையில் வேறு ஒரு சிக்கலிலும் facebook திணறியது. மார்க்குடன் ஹர்வார்டில் படித்த Cameron, Tyler Winklevoss, மற்றும் Divya Narendra மார்க் மீது ஒரு வழக்கு தொடர்ந்தனர். (இவர்கள் connectU எனும் தளத்தை உருவாக்கியவர்கள். connectU எனபது HarvardConnect.com என்ற தளத்தின் புதிய பரிமானம்) facebook இவர்களது idea எனபது தான் வழக்கு. மார்க் இவர்களது codeஐ திருடிவிட்டார் என புகார் செய்தனர். இதனால் 2007இல் facebook கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதன் வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள். ஊடகங்கள் மார்க்கை ஒரு பில்லியன்ஐ உதாசீனபடுத்திய சிறுவன் என விமர்சித்தன. ஆனால் அது வெகு நாள் நீடிக்க வில்லை. விரைவில் வாரத்திற்கு ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். facebook கல்லூரி மாணவர்களுக்கு உரிய ஊடகம் என்பதை தாண்41டி அணைத்து தரப்பினரும் இதில் சேர்ந்தார்கள். Microsoft 240 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது. 


இன்று facebook 700 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு சுமார் நாற்பத்தொரு  பில்லியன் டாலர்கள் வருமானமுள்ள நிறுவனமாக பிரமிப்புட்டி நிற்கிறது. இணையதளத்தின் முன்றாவது பெரிய நிறுவனமாக இது மிரட்டுகிறது!


இனைய தளங்களின் டாப் 4 தர வரிசை

  1. google.com --> $193 பில்லியன் 
  2. amazon.com --> $74.4 பில்லியன் 
  3. facebook.com --> $41 பில்லியன்
  4. eBay --> $39.3 பில்லியன்
மேலும் பல தகவல்களுடன் அடுத்த இதழில் சந்திக்கிறேன்.. 
உங்களுக்கு இந்த பக்கம் பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்! 

நன்றி!!!

1 comment:

  1. Hi,Kuttikalatta blogspotla varum articles ellam nalla information iruku ennaku.good job!!!

    ReplyDelete