Monday, February 21, 2011

ஓட்டு போடலாமா..?

தேர்தல் நேரம் இது... என்னை நானே எப்படி விமர்சித்து கொள்வது என யோசித்தேன்.. 
ஓட்டு போடும் இளிச்சாவாயன்..!
ஓட்டு போடாத கேனையன்..!
இந்த இரு வரிகள் மிகவும் பொருந்தும். எனக்கு மட்டுமல்ல இந்தியாவில் பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்தும்!


நமது முதல்வர் தலைமையில் திமுக பொது குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றபடுகின்றன. அத்தனை தீர்மானங்களும் சொல்லி வைத்தார் போல் அரசியல் லாபத்திற்காக அல்லது மக்களை திசை திருப்புவதற்காகவே அமைந்துள்ளன. அவர்கள் செயல்கள் அனைத்தும் அப்பட்டமாக அரசியல் ஆதாயம் தேடுகின்றன!

அப்போ ஆதிமுக நல்லவங்களான்னு கேட்டா அதுவும் கெடையாது. அவங்க அதுக்கு மேல. 2006 தேர்தல் முடிந்து நான்கு ஆண்டுகள் இந்த அம்மாவை காணோம். இப்போ தேர்தல் வந்ததும் திடீர் என தோன்றுகிறார் அம்மையார். கட்சி கொள்கைகள் வருகின்றன, MGR வருகிறார், மக்களின் பிரச்சணைகள் இவர் கண்களுக்கு தெரிகின்றன. 

பல வருஷமா சேத்துகிட்டு இருந்த ஈழத்து உறவுகளை காப்பாற்ற எந்த கட்சிக்கும் வக்கில்லை. அறிக்கைகளை மட்டுமே விடுத்த அரக்கர்கள் ஆயினோம்! மனிதாபிமானம் எந்தனை மைல் என கேட்டு மடத்தனமாய் நின்றோம், சரி அது தான் வெளி நாட்டு பிரச்னை, நம்மாள ஒன்னும் செய்ய முடியல. அதே இலங்கை அரசு நூற்று கணக்கில் அப்பாவி மீனவர்களை கொன்றது. அதை கேக்கவும் நமக்கு வக்கில்லை. அந்த அரசிற்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றக்கூட நமக்கு துப்பில்லை. நாம் தமிழர் என ஒரு இயக்கம் உருவாகி அதை தட்டி கேட்டால் அவர்களை சட்ட ஒழுங்கை சீர் குலைதததாக கூறி அவர்களை நாம் சிறையில் அடைத்தோம். 
சரி அந்த இயக்கமாவது நமக்கு நம்பிக்கை அளிக்குமா என்றால் அதுவும் இல்லை. திமு க வில் இருந்து தப்பிக்க ஆதீமுக விற்கு ஓட்டு போடா சொல்கிறார். 

கோடிகணக்கில் லஞ்சம் எனபது போய் லட்சகணக்கான கோடிகளில் லஞ்சம் புழங்குகிறது. இதை கேட்க துப்பில்லாமல் மறைக்க பார்க்கிறது அரசு. அந்த அரசிற்கு நமது ஆதரவு! திட்டம் போட்டு திருடுபவர்களும் இவர்களே, அதனால் தான் அதற்கு சட்டம் போட மறுக்கிறார்கள்! 

நூறு ரூபாய்க்கு கரண்ட் பில் கட்டமா விட்டு பாருங்க, அடுத்த நாள் உங்க வீட்டு   மின் இனைப்ப துண்டிசிடுவாங்க. ஆனா கோடிகணக்கான கோடிகளில் நம் வரிப்பணம் கருப்பு பணமாக வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அது நம் அரசாங்கத்திற்கும் தெரியும், இருந்தும் நடவடிக்கை எடுக்க தயக்கம். இந்திய குடிமகனின் கடைசி நம்பிக்கையான உச்ச நீதமன்றம் கூறியும் அவர்கள் கேட்க மாட்டார்கள். அந்த கயவர்களை அம்பலபடுத்த மறுக்கிறார்கள். காரணம் வெளி நாட்டு உறவு பாதிக்கப்படும். நம்ம நாட்டு நிலைமையே சரியல்ல.. இதுல இது வேற... 

இது எல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரியும். இருந்தாலும் நாம் ஓட்டு போடுகிறோம் அல்லது ஓட்டு போடாமல் விட்டு விடுகிறோம்.

சரிதானா? இல்லை, நிச்சயம் இல்லை! சரி இதற்கு என்னதான் தீர்வு. முழு மனதாக 49(o) சட்டத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். 

49(o) யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்ய ஒரு வழி. ஒட்டு பதிவின் பொது இதை கேட்டு பெறலாம். வெற்றி பெற்றவரின் ஒட்டு வித்தியாசத்தை விட 49(o) கூடுதலாய் இருக்குமாயின் மறு வாக்குபதிவு நடத்தப்பட வேண்டும் மேலும் முதல் வாக்குபதிவின் பொழுது போட்டியிட்ட எவரும் மறு வாக்குபதிவின் பொழுது போட்டியிட முடியாது

இவர்கள் திருந்தி வரும் வரை ஜனாதிபதி ஆட்சி நடக்கட்டும். எதனை முறை வேண்டுமோ அத்தனை முறை நாம் 49(o)  வை கையில் எடுப்போம். 

எனது எண்ணம் சரியா என தெரியவில்லை அனால் நல்ல தலைவர்கள் கிடைக்கும் வரை இப்படி செய்வதில் தவறொன்றும் இல்லை என தோன்றுகிறது!

உங்கள் கருத்துகளை comments பிரிவில் பதிவு செய்யுங்கள்.  

No comments:

Post a Comment