Wednesday, February 16, 2011

படித்ததில் பிடித்தது...

சமீபத்தில் ஜூனியர் விகடனில் நான் படித்த சீமானின் எழுத்துக்கள், என்னை ஈர்த்த இந்த வரிகள் உங்கள் சிந்தனைக்காக!


''அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தேசியப் பணியில் இருந்து - வரலாற்று அழைப்பில் இருந்து தமிழ் இளம் பரம்பரை ஒருபோதும் ஒதுங்கிக்கொள்ள முடியாது!''
 - மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன்


அடி கொடுத்தவனும் - மடி அறுத்தவனும் இங்கே கொடி பிடிக்கிறான். வலை அறுத்தவனும் முலை அறுத்தவனும் இங்கே வசதியாக வந்துபோகிறான். கைகட்டி நின்றவனும், பொய் கொட்டி வென்றவனும் மீண்டும் 'கை’கோத்து நிற்கிறான். கூட்டால் குலை அறுத்தவனை, வாக்குச் சீட்டால் வஞ்சம் தீர்க்கக்கூடிய சூழல் வாய்த்திருக்கிறது தமிழா!

அவரது கருத்தில் எனது பார்வை
அவரது எண்ணங்கள் உண்மையில் உத்தமமகதான் தெரிகிறது..!
இந்த கட்டுரையில் அவர் கூறுவது போல் ஆதீமுகா விற்கு ஓட்டு போட என் மனம் மறுக்கிறது. இருக்கிற கொள்ளையர்களில் எந்த கொள்ளையன் உன்னை கொலை செய்யாமல் இருப்பானோ, அவனுக்கே உங்கள் ஓட்டு என்பது ஜனநாயகத்துக்கு புறம்பாக இருக்கிறது!
ஓட்டு இயந்திரத்தில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வர்றவனெல்லாம் வரிஞ்சு கட்டிக்கிட்டு சுருட்ட வந்த, நாங்க எங்க தான் போறது. அப்புறம் எல்லோரும் அமெரிக்கா போறான்னு ஒரு குற்றச்சாட்டு வேற.. எப்படி போகாம இருப்பான். அவன் போகாம இருக்குறதுக்கு ஒரு காரணம் இருக்கணும்..! திருடனை பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! இதுல என்ன விசேசம்ன இந்த அரசியல் ஒரு மிக பெரிய மாய உலகம். இதற்குள் செல்லும் எல்லோரும் திருடராய் மாறுகிறார்கள். திருந்தியவனு எவனும் இதிலிருந்து மீண்டு வந்தது கிடையாது..!

அது சரி சீமான் சொல்றதெல்லாம் இருக்குற குப்பைல எந்த குப்ப நல்ல குப்பனு பாக்க சொல்லறாரு...!!!

வாழ்க தமிழ்!!! வாழ்க இந்தியா!!!

4 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்ய 49(o) உள்ளது. ஒட்டு பதிவின் பொது இதை கேட்டு பெறலாம். வெற்றி பெற்றவரின் ஒட்டு வித்தியாசத்தை விட 49(o) கூடுதலாய் இருக்குமாயின் மறு வாக்குபதிவு நடத்தப்பட வேண்டும் மேலும் முதல் வாக்குபதிவின் பொழுது போட்டியிட்ட எவரும் மறு வாக்குபதிவின் பொழுது போட்டியிட முடியாது.

  ReplyDelete
 3. திருடனை பார்த்து திருந்தா விட்டாலும் திருட்டை ஒழிக்க இவ்வாறான ஒரு வழி இருந்தும் தேர்தல் ஆணையமோ அல்லது எந்த ஒரு ஆரசியல் கட்சியோ நாடு மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணம் இல்லை.

  ReplyDelete
 4. நண்பா...
  அது தெரியுது எங்களுக்கு... அப்படி ஒரு வசதி சட்டத்துல இருந்தாலும் என் செயல்படுத்த முடியலனுதன் கேக்குறோம்...?
  நீங்க அந்த பாரம் அ வாங்கி பூர்த்தி செஞ்சு கொடுக்குற வரைக்கும் பூத்ல இருக்குற கட்சிக்காரன் சும்மாவா இருப்பான்? அதுக்கு வாக்கு பதிவு இயந்திரத்திலேயே இந்த வசதி இருந்தா நெறைய பேரு ஓட்டு போட முன் வருவாங்களா இல்லையா? அத நமக்கு செய்ய தெரியாதா இல்ல முடியாதா?
  எல்லாம் ஒரு கணக்கு தான் நண்பா!! ;)

  ReplyDelete