Tuesday, February 15, 2011

வடுகபட்டி வைரம்...

வடுகபட்டி வைரம்...

என்னை படிக்க தூண்டியது
எனக்கு தமிழ் கற்றுகொடுத்தது அவரின் படைப்புகள்...
நான் முழுதாக படித்து முடித்த முதல் தமிழ் நாவல் "கள்ளிகாட்டு இதிகாசம்"!

அந்த காவியத்தை காதலித்த போது பேயத்தேவரை பேய்த்தனமாய் காதலித்திருக்கிறேன்!
அவரது கண்ணீரில் கரைந்து இருக்கிறேன்!
முதல் முறையாக பாடல் வரிகளில் பசி ஆற நினைத்தது இவரது படைப்புகளில் தான்!
வெறும் காதல் வரிகள் என்றில்லாமல், அறிவியல் பூர்வமான, கருத்துக்கள் அவர் படைப்புகளில் பளிச்சிடும். Dan Brown இன் Da vinci Code ஐயும் Lost Symbol ஐயும் படிக்கும் தமிழ் இளைங்கர்களுக்கு இவரது கள்ளிகாட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் கண்டிப்பாக ஒரு வியப்பினை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அறிவியல், வரலாறு, சமுக சிந்தனை, அரசியல், இலக்கியம் இவை அனைத்தும் கலந்து தேன் குழைத்து கொடுக்கும் தென்றல் இவர்...

நான் புசித்ததில் ருசித்த சில வைரங்கள் இங்கே நீங்கள் ரசிபதர்க்காக...
"மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு"
"தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ"
"புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ"
"உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை"

"பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது"

"ஏழுநிறங்களை எண்ணிமுடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மனதினைக் கண்டுதெளியுமுன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே"
"நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ" 
"சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ
ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ"
"எரிந்து விட்டது வீடு
இனி தெளிவாய் தெரியும் நிலா!"
"ஆசையை துப்பு
ஞானம் வரும்!
அச்சம் துப்பு
வீரம் வரும்!
ரகசியம் துப்பு
தூக்கம் வரும்!"
"கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது...
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
புத்திகெட்ட தேசம் போடி வச்சு பேசும்...
ஜாதி மத பேதமெல்லாம் நல்லவங்க செஞ்ச மோசம்..!"


மேலும் பல ருசிகளுடன் சந்திக்கிறேன்!

-- ஓம்

1 comment:

  1. என் வாழ்வீல் நான் முதல் முதலீல் படித்த நாவல் "கள்ளிகாட்டு இதிகாசம்"! எனக்கு மிகஊம் பிடித்த நாவல்..

    ReplyDelete